கள்ளக்குறிச்சி: கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இன்று(டிச.,5) திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்தன.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அறிவுரைப்படி இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின.
அதையொட்டி, பள்ளியில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியின் மூன்றாம் தளத்தை மட்டும் பூட்டி 'சீல்' வைக்க உத்தரவிட்டார்.