ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று (டிச. 5) முதல் டிச. 8 வரை, 4 நாட்கள் தினமும் காலையில் மழை சூழ்நிலையை பொறுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று மழை காரணமாக அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கடந்த இரு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படவில்லை. இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சுவாமி தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் கார்த்திகை மாத பிரதோஷ நாளான இன்று (டிச. 5) முதல் டிச. 8 வரை 4 நாட்கள் தினமும் மழை சூழ்நிலையை பொறுத்து காலை 6:30 மணிக்கு மேல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.