வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மேட்டுப்பாளையம்: ''மக்கள் கோரிக்கைகளுக்கு, பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றி வருகிறார்,'' என, மத்திய இணையமைச்சர் முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் முருகன், ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், மேட்டுப்பாளையம் - கோவை ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க கோரிஇருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம் - கோவை ரயில், இனி தினமும் இயக்கப்படும்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு, நேற்று மாலை, 5:00 மணிக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. மத்திய இணையமைச்சர் முருகன், கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.
![]()
|
தற்போது, மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், ஏழு நாட்களும் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மூன்று முறை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் ஐந்து முறை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துஉள்ளனர்.
இது குறித்து ரயில்வே அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். மக்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.