''புதிய அதிகாரி நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்குல்லா...'' என்றபடியே, மெதுவடையை கடித்தார் அண்ணாச்சி.
''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, தரமணியில உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இருக்கு... அதன் இயக்குனர் பொறுப்பை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் கவனிச்சிட்டு இருந்தாரு வே...
![]()
|
''சமீபத்துல இந்த பொறுப்புல இருந்து அவர் விடுவிக்கப்பட்டதால, அதே நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புல இருந்த கோபிநாத்துக்கு, இயக்குனர் பொறுப்பை கூடுதலா குடுத்திருக்காவ...
''தமிழ் ஆராய்ச்சிக்கான நிறுவனத்துல, பேராசிரியர் அல்லாத, தமிழ் ஆராய்ச்சியிலயும் ஈடுபடாத, பி.காம்., மட்டுமே படிச்சவருக்கு இயக்குனர் பொறுப்பு குடுத்தது, இப்ப தான் முதல் முறையாம்... இது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.