ஆற்காடு: ஆற்காடில் தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது பெண் கணவரை பிரிந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடில் வசிக்கிறார். அவரது, 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். ஆற்காடு அண்ணா நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர், 33, என்பவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி பேச்சு கொடுத்து வந்தார்.
கடந்த மாதம், 28ம் தேதி நள்ளிரவில் பாஸ்கர், அவரது மனைவி துர்கா, 30 ஆகியோர், அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகளை, கஞ்சா வியாபாரி பாஸ்கர் பாலியல் பலாத்தாரம் செய்ய, அவரின் மனைவி துர்கா, மொபைல்போனில் அதை 'வீடியோ' எடுத்தார்.
அந்த வீடியோவை காண்பித்து, இருவரையும் அந்த கஞ்சா வியாபாரி அடிக்கடி பலாத்காரம் செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். வேதனையடைந்த அந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று பாஸ்கர் மற்றும் அவர் மனைவியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.
பனியன் நிறுவன அதிகாரி கத்தியால் குத்தி கொலை
திருப்பூர்: திருப்பூர், திருமுருகன்பூண்டி துரைசாமி நகரைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 39; பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றார். இரவு 11:00 மணிக்கு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில், அனுப்பர்பாளையம் எடிசன் நகரில் உள்ள தினேஷ் என்பவர் வீட்டின் கதவை தட்டி, காப்பாற்றும்படி கதறியுள்ளார்.
தினேஷ், போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அவரை, ஆம்புலன்சில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் அனில்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து,வேலம் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பாடவெட்டிவலசையை சேர்ந்த வடிவேலு மகள் ஹரிணி, 16; தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்தார். இவர், அதிகநேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஏற்கனவே, உடல்நலமும் பாதிக்கப்பட்டதால் மொபைல் போன் பயன்பாட்டை குறைக்குமாறு தாயார் முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் இவர் விஷம் சாப்பிட்டுள்ளார்.
இதனால் உடல்நலம் பாதிக்கவே, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேசிய நிகழ்வுகள்:
ரூ.900 கோடி மோசடி: தேவஸ்தான நிர்வாகி கைது
திருப்பதி: ஆந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வழங்குவதாக கூறி 2,500 பேரிடம், 900 கோடி ரூபாய் மோசடி செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.
![]()
|
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருப்பவர் லட்சுமி நாராயணா. இவர், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான அமீன்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி 2,500 பேர், 900 கோடி ரூபாயை குடியிருப்புக்காக முதலீடு செய்தனர்.
ஆனால், இவர்கள் யாருக்கும் லட்சுமி நாராயணா வீடுகள் கட்டிக் கொடுக்கவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், போலீசில் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தனர். இதற்கிடையே, ஆக., 6ம் தேதிக்குள் பணத்தை திருப்பித் தருவதாக லட்சுமி நாராயணா உறுதி அளித்திருந்தார்.
அவர் கூறியபடி பணத்தை திருப்பி வழங்கவில்லை. இதையடுத்து, அவரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியிலிருந்து லட்சுமி நாராயணா ராஜினாமா செய்துள்ளார்.
தாதா கொலை வழக்கு: 5 பேர் சிக்கினர்
சிகார்: ராஜஸ்தானில் பிரபல தாதா ராஜு தேஹத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தாதா ராஜு தேஹத், அவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற நர்ஸ் கைது
உ.பி.,யின் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு, மகேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கவிதா எடுத்து வந்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து, பிரேத பரிசோதனை செய்தது. அதில், மகேஷின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், கவிதாவின் 13 வயது மகளிடம் விசாரித்தனர்.
அப்போது, தந்தையின் கழுத்தை தாய் நெரித்ததை பார்த்ததாக, அந்த சிறுமி தெரிவித்தார். இதை தொடர்ந்து கவிதாவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டவர், நடந்த சம்பவங்களை விவரித்தார். மகேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடன் தகராறில் ஈடுபடுவதோடு, கடுமையாக தாக்கி வந்ததாக கூறினார்.
இந்த நேரத்தில் மருத்துவமனையில் காப்பீட்டு பிரிவில் வேலை பார்க்கும் வினய் சர்மா என்பவருடன் கவிதாவுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 29ல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகேஷ் துாங்கிக் கொண்டிருந்த போது கவிதா, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், தற்கொலை போல அதை மாற்ற நாடகமாடி உள்ளார். இதற்கு வினய் சர்மாவும் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.
உலக நிகழ்வுகள்: 4 உளவாளிகளுக்கு ஈரானில் துாக்கு
டெஹ்ரான் : இஸ்ரேலுக்காக, ஈரானில் உளவு பார்த்த நான்கு உளவாளிகள் ஈரானில் நேற்று துாக்கிலிடப்பட்டனர்.