தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்

Added : டிச 05, 2022 | |
Advertisement
சபரிமலை:இந்தியாவின் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் ஏழு நாட்களில் வீடு வந்து சேரும். சுவாமி ஐயப்பன், சன்னிதானம் அஞ்சல், சபரிமலை 689713. இந்த முகவரி 1963ல் தொடங்கப்பட்டது. அலைபேசியின் வளர்ச்சியிலும் இன்றும் ஏராளமான கடிதம், மணியார்டர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இவை கட்டுகளாக கட்டி கோயில் நடையில் வைத்த பின்னர்
 தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்

சபரிமலை:இந்தியாவின் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் ஏழு நாட்களில் வீடு வந்து சேரும்.

சுவாமி ஐயப்பன், சன்னிதானம் அஞ்சல், சபரிமலை 689713. இந்த முகவரி 1963ல் தொடங்கப்பட்டது. அலைபேசியின் வளர்ச்சியிலும் இன்றும் ஏராளமான கடிதம், மணியார்டர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இவை கட்டுகளாக கட்டி கோயில் நடையில் வைத்த பின்னர் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

தற்போது பக்தர்களுக்காக சுவாமி பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல்துறை நடத்தி வருகிறது. இதன் படி மூன்று வகையான பிரசாதம் அனுப்பப்படும். 520 ரூபாய் பாக்கெட்டில் ஒரு அரவணை, 960 ரூபாய் பாக்கெட்டில் நான்கு அரவணை, 1760 ரூபாய் பாக்கெட்டில் 10 அரவணை இருக்கும். இதனுடன் எல்லா பாக்கெட்டிலும் நெய், குங்குமம், மஞ்சள், விபூதி போன்றவையும் இருக்கும். இந்தியாவின் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் இதற்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த ஏழு நாட்களுக்குள் பிரசாதம் விரைவு தபாலில் வீட்டுக்கு வந்து சேரும்.

கடந்த 15 நாட்களில் 208 ஆர்டர்களுக்கு பிரசாதம் அனுப்பியதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் கிடைத்துள்ளது. ஐயப்பன் படம், 18 படிகளுடன் கூடிய முத்திரை என்ற சிறப்புடன் செயல்பட்டு வரும் சபரிமலை தபால் நிலையம் 60வது வயதை எட்டியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X