வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தி தேர்வில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறையை மாற்ற முடியாது என்று கேரள ஐகோர்ட்டில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை மேல்சாந்தி தேர்வுக்கு மலையாள பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சபரிமலை டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சமஉரிமைக்கு எதிரானது. ஒரு வகை தீண்டாமை' என்றும் வாதிட்டனர்.
ஆனால் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இது புராதன காலம் முதல் இருந்து வரும் நடைமுறை என்பதால் இதை மாற்ற முடியாது' என்று தெரிவித்தனர். சபரிமலை மேல்சாந்தி என்பது ஒரு பொதுவான நிரந்தர பதவி அல்ல. ஒரு சமுதாயத்தை சேர்ந்த அனுபவமுள்ள பூஜாரிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடை முறை என்றும் குறிப்பிட்டனர்.
![]()
|
ஆண்டாண்டு காலமாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சபரிமலைமேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேட்ட போது, 'இது தவறு என்றால் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மனுதாரருக்குதான் உள்ளது' என்று தேவசம்போர்டு வழக்கறிஞர் கூறினார்.
இந்த பாகுபாட்டை மாற்றி தகுதி உடைய எவரும் மேல்சாந்திக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை வரவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது. பின்னர் இறுதி வாதத்துக்காக டிச. 17க்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
Advertisement