வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நாளை, பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை 4:00 மணிக்கு கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இதற்கான கொப்பரை, மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்படும். மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும் 1,150 மீட்டர் காடா துணியாலான திரி தயாராக உள்ளன.
![]()
|
கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடி, தீபத்திருவிழாவால் கோவில் மட்டுமின்றிதிருவண்ணாமலை நகரமே களைகட்டி உள்ளது.
விற்று தீர்த்த 'ஆன்லைன்' டிக்கெட்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் நாளை காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.இதை காண, 500 ரூபாயில் 500 அனுமதி சீட்டுகள்; மஹா தீப தரிசனத்திற்கு 600 ரூபாயில் 100 அனுமதி சீட்டுகள்; 500 ரூபாயில் 1,000 அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி நேற்று காலை, 10:00 மணிக்கு விற்பனை துவங்கியது. அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.பரணி தீப தரிசனத்துக்கு, 6ம் தேதி அதிகாலை 2:00 - 3:00 மணி; மஹா தீப தரிசனத்துக்கு பகல் 2:30 - 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டையுடன், அம்மணி அம்மன் கோபுரமான வடக்கு கோபுரம் வழியாக, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.விபரங்களுக்கு, 1800 425 3657 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.