மதரசாவில் குழந்தைகள் துன்புறுத்தல்: தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : டிச 05, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: சென்னையிலுள்ள 'மதரசா' ஒன்றில் பீஹாரைச் சேர்ந்த 12 ஆதரவற்ற குழந்தைகளை, அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் பீஹார் மற்றும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சென்னை மாதவரம் அருகே இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான மதரசா செயல்பட்டு வருகிறது. இங்கு பீஹாரைச் சேர்ந்த சேர்ந்த, 5 - 12 வயதுள்ள குழந்தைகள்
Torturing, 12 Boys,Bihar,Chennai Madrasa,மதரசா, குழந்தைகள், துன்புறுத்தல்

புதுடில்லி: சென்னையிலுள்ள 'மதரசா' ஒன்றில் பீஹாரைச் சேர்ந்த 12 ஆதரவற்ற குழந்தைகளை, அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் பீஹார் மற்றும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சென்னை மாதவரம் அருகே இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான மதரசா செயல்பட்டு வருகிறது. இங்கு பீஹாரைச் சேர்ந்த சேர்ந்த, 5 - 12 வயதுள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த குழந்தைகளை சிலர் அடித்துத் துன்புறுத்துவதாக போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், 12 குழந்தைகளை மீட்டனர்.


latest tamil news

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில், சென்னையைச் சேர்ந்த இருவரையும், பீஹாரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


சென்னையில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக மற்றும் பீஹார் மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் சில குழந்தைகளுக்கு உடலில் காயம் இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (15)

Sangi Mangi... - Tamilan Nadu,இந்தியா
05-டிச-202213:59:34 IST Report Abuse
Sangi Mangi... ............
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-டிச-202213:21:48 IST Report Abuse
raja என்னது பிச்சை பொட்டவங்களுக்கு சம்மனா...பிச்சைக்காரன் கொபாபடுவான்..
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-டிச-202212:19:42 IST Report Abuse
Rafi அடித்து துன்புறுத்தியதாக தகவல் அடிப்படையிலேயே மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளது. மதரஸாவில் ஏதாவது வகையில் தவறு நடக்கின்றதா என்று அரசும் சில எதிரமைப்புகளும் தேடியதன் விளைவே துன்புறுத்தியதாக வந்த தகவல்..... பொய்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
05-டிச-202213:09:42 IST Report Abuse
Aarkayசவூதி ஒட்டகம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். சார் பொய்னு சொல்லிட்டார். போய் வேலைய பாருங்க. பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று ஒருவன் சொல்கிறான். அதற்கும் எந்த மகளிர் அமைப்பிலிருந்தும் எவ்வித எதிர் கருத்துக்களும் இல்லை. இங்கு நிறைய அமைப்புகள் சில சாராரிடமிருந்து வரும் உளறல்களுக்கு செவிட்டு ஊமைகளாகிப்போகின்றன....
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
05-டிச-202214:52:42 IST Report Abuse
தமிழன்இந்த மதராஸா இல்ல, எதோ ஒரு மதராஸால பாடம் எடுக்குற ஒரு ஆள், ஒரு பையன போட்டு அடிஅடி ன்னு அடிக்கிற வீடியோ சில வருஷங்களுக்கு முன்னாடி வந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X