ஹிந்து பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்பு கேட்டார் அசாம் எம்.பி.,

Added : டிச 05, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
குவஹாத்தி: ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, அசாமைச் சேர்ந்த எம்.பி., பத்ருதீன் அஜ்மல், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான பத்ருதீன் அஜ்மல் சமீபத்தில்
Badruddin Ajmal, Assam MP,Hindu Men,apologises, AIUDF

குவஹாத்தி: ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, அசாமைச் சேர்ந்த எம்.பி., பத்ருதீன் அஜ்மல், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான பத்ருதீன் அஜ்மல் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹிந்துக்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

'மக்கள் தொகை விஷயத்தில் 'முஸ்லிம்கள் பார்முலா'வை ஹிந்துக்கள் பின்பற்ற வேண்டும். இளம் வயதில் திருமணம் செய்தால் தான் அதிகமான குழந்தை களை பெற்றுக் கொள்ள முடியும்' என, அவர் குறிப்பிட்டிருந்தார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.


latest tamil news

இது குறித்து அஜ்மல் கூறியுள்ளதாவது: நான் ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் குறிப்பிடவில்லை; பொதுவாக குறிப்பிட்டேன். இருப்பினும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. என் பேச்சுக்காக அவமானப்படுகிறேன். அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது.

என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன.

அஜ்மலுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (15)

05-டிச-202221:04:51 IST Report Abuse
பாரதி ஹிந்துவை திட்டிப் பேசினால் சந்தோஷப்படுவானுக... திருடணுக...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-டிச-202217:04:20 IST Report Abuse
DVRR (ஏஐயுடிஎப்) கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அஜ்மல் கூறுகையில், "இஸ்லாமிய மத ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். இஸ்லாமிய மத பெண்கள் அரசு அனுமதித்த வயதான 18 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், மறுபுறம் இந்து மதத்தினர் திருமணம் ஆவதற்கு முன்பே ஒன்று, இரண்டு அல்லது மூன்று மனைவிகளை சட்டவிரோதமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு பணத்தை சேமிக்கின்றனர். இஸ்லாமிய மத மக்கள் தொகையை போன்று இந்து மத மக்கள் தொகை அதே அளவில் வளர்வதில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் 40 வயதில் இந்து மதத்தினர் திருமணம் செய்துகொள்கின்றனர். 40 வயதுக்கு பின்னர் அவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும். இந்து மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரின் பார்முலாவை பின்பற்றி அவர்களின் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். இந்து மதத்தினர் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு 20-22 வயதிலும், பெண் பிள்ளைகளுக்கு 18-20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அதன் பின் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதை பாருங்கள்' என்றார். இதில் உள்ள தவறு. 1) எல்லா இந்துவும் ஒருக்காலும் 2,3 பெண்களுடன் குடும்பம் நடத்தவில்லை 2) எல்லா ஹிந்துவும் 40 வயதிற்கு பின்னர் தான் கலயாணம் செய்து கொண்டு???இதுவும் தவறு. ஆகவே சொல்லும் போது ஒரு ஒரு அறிவுக்கூர்மை வேண்டும் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம் அனால் வார்த்தை வெளியில் வரும்போது அதற்கு ஒரு நல்ல திருத்தமான வரை முறை வேண்டும். ஒரு தலைவர் என்று சொல்லிக்கொள்பவர் இப்படி சுத்தமான அறிவிலியாக இருக்கக்கூடாது. இதிலிருந்து தெரிவது எவ்வளவு தான் பெரிய தலையாயிருந்தாலும் அறிவு சுத்தமாக முஸ்லீம் என்னும்போது இல்லவே இல்லை என்று. நாட்டின் ஜனத்தொகை அளவுக்கு மீறி போவதற்கு ஒரே காரணம் இந்த மடச்சாம்பிராணி முஸ்லிம்கள் தான் அல்லா கொடுக்கின்றார்???அப்போ ஆன் பெண் உறவு கொள்ளாமலே அல்லா கொடுக்கின்றார் அப்படித்தானே????இன்றைய ஜனத்தொகை 1947 ல் இருந்து பார்க்கும் வேளையில்???இந்த முஸ்லீம் போல ஆகியிருந்தால் என்ன விபரீதம் ஆகியிருக்கும்????1947-முஸ்லீம் - 1 கோடி முஸ்லீம் அல்லாதவர்கள் 34-கோடி இன்று முஸ்லீம் 23-கோடி முஸ்லீம் அல்லாதவர்கள் 117-கோடி. மொத்தம் 140.6-கோடி. முஸ்லிம்கள் விகிதத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் போயிருந்தால் இன்று ஜனத்தொகை என்னவாகியிருக்கும் இந்தியாவில்???முஸ்லிம்கள் 23-கோடி முஸ்லீம் அல்லாதவர்கள் 782-கோடி. இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 805-கோடி ஆகியிருக்கும். என்ன அஜ்மல் ஓகேயா????
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-டிச-202214:00:41 IST Report Abuse
Narayanan பொது சிவில் சட்டம் மட்டுமே இதற்கான தீர்வு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X