''மூத்த அமைச்சர் புறக்கணிச்சிட்டாரான்னு பட்டிமன்றம் நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போன வாரம் சென்னையில, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில நடந்துச்சே... இதுல, விருதுநகர் மாவட்டச் செயலரான சாத்துார் ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமா கலந்துக்கலைங்க...
![]()
|
''அதே மாதிரி, துணை பொதுச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரிய சாமியும் கலந்துக்கலைங்க... 'அவர் மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்காக, டில்லி போயிட்டதால வரலை'ன்னு சிலர் சொல்றாங்க...
''ஆனா, 'கூட்டுறவுத் துறையை விமர்சனம் செஞ்ச நிதி அமைச்சர் தியாகராஜன் மேல, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்காத அதிருப்தியில தான், அவர் கூட்டத்தை புறக்கணிச்சிட்டார்'னு இன்னொரு தரப்பு சொல்லுதுங்க... இதுல எது உண்மைன்னு, தி.மு.க., வட்டாரங்கள்ல விவாதமே நடந்துட்டு இருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.