வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி: ''நமக்குள் கலாசார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவருமே ஒன்று தான்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடந்து வரும், 'காசி தமிழ் சங்கமம்' விழாவின் ஒரு பகுதியாக, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நேற்று நடந்த கோவில் கட்டடக்கலை மற்றும் பிற பாரம்பரிய அறிவு வடிவங்கள் என்ற நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இந்திய மக்களாகிய நாம், நம் சொந்த மண்ணில் ஆளுக்கொரு மொழி பேசுகிறோம். நம் கலாசாரங்கள் வேறு வேறாக உள்ளன. ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று தான். காசியில் நடக்கும் அனைத்துமே காஞ்சிபுரத்திலும் நடக்கின்றன. இதன் வாயிலாக இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே பல நுாற்றாண்டுகளாக உள்ள தொடர்பு புலப்படுகிறது.
வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான உறவு, 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி வாயிலாக உணரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.