இந்துார்: இந்துாரில் உள்ள சட்டக் கல்லுாரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் மீது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவு புகார் கூறியுள்ளது. மதவாதத்தையும், அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிரான கருத்துக்களையும் போதிப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில் அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி., சார்பில், கல்லுாரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
|
இரண்டு ஹிந்து ஆசிரியர்கள் அலட்சியப் போக்குடன் இருப்பதுடன் அரசுக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வருகின்றனர்.'லவ் ஜிஹாத்' பரப்புவதுடன், அசைவ உணவுகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு, கல்லுாரி முதல்வர் இமானுர் ரஹ்மான் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.