சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்று(டிச.,05) 6வது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அதிமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் அவரவர் ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.