மேட்டூர்:
தி.மு.க., கவுன்சிலரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில், 4 பேரை கைது செய்த போலீசார், கூலிப்படையினரை தேடுகின்றனர்.
மேட்டூர், குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 55. மேட்டூர் நகராட்சியில், 1வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த நவ., 30ல், நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவரை, மர்ம கும்பல் கொல்ல முயன்றது. காயத்துடன் அவர் தப்பினார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், மேட்டூர், வாய்க்கால்பாலத்தை சேர்ந்த பிரபு, 33, மாதா கோவில் மணிவாசகன், 24, மீனவர் தெரு ஜெயக்குமார், 37, மீன்கார தெரு ராமச்சந்திரன், 27, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும், 6 பேரை தேடிவருகின்றனர்.
இதுகுறித்த போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்டுள்ள பிரபுவின் அண்ணன் மாதேஷ், 2015ல் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட, தி.மு.க., கவுன்சிலர் வெங்கடாஜலத்தை பழிவாங்கும் நோக்கில் பிரபு, மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் கொல்ல முயன்றார். ரவுடி பட்டியலில் உள்ள பிரபு மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement