ஆற்காடு, டிச. 5-
கன்னியாகுமரியை சேர்ந்த, 40 வயது பெண் கணவரை பிரிந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வசிக்கிறார். அவரது, 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். ஆற்காடு அண்ணா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர், 33, பெண்ணுடன் அடிக்கடி பேச்சு கொடுத்து வந்தார்.
கடந்த மாதம், 28ம் தேதி நள்ளிரவில் பாஸ்கர், அவரது மனைவி துர்கா, 30 ஆகியோர், பெண் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்பெண், அவரது மகளை பாஸ்கர் பலாத்காரம் செய்ய, அவரின் மனைவி மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை காண்பித்து, இருவரையும் அடிக்கடி பலாத்காரம் செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
மனவேதனையடைந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாஸ்கரை போக்கோ சட்டத்திலும், அவரது மனைவி துர்காவையும் நேற்று கைது செய்து, வேலுார் சிறையில்
அடைத்தனர்.