வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவியான துர்கா, மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வானகிரி மீனவர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி, எல்லை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா இன்று (டிச.5) வருகை தந்தார். அவருக்கு கிராமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவரை சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்றனர்.
அங்குள்ள ரேணுகாதேவி, எல்லை அம்மன் தெய்வங்களை பயபக்தியுடன் தரிசனம் செய்தார் துர்கா. பின்னர் அங்கு குழுமியிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி யூனியன் சேர்மன் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். டிஎஸ்பி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.