வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,5) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக திமுக.,வின் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.