விருதுநகர்: விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் ரெங்கநாயகி, 50, இவரிடம் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பத்ம நாபன், அங்குராஜ், கொடைக்கானல் பா.ஜ., நகர தலைவர் சதீஷ்குமார், குழந்தைச்செல்வம், சுமதி, சந்திரன் ஆகிய 6 பேர் மதுரையில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததாக கூறி ரூ.70 லட்சம் முன்பணம் பெற்று சென்றனர். ஆனால் நிலத்தை பதிவு செய்ய தாமதப்படுத்தி வந்த நிலையில் அந்த நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து ரெங்கநாயகி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் திருப்பி தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ரெங்கநாயகி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த 6 பேர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (டிச.,5) பா.ஜ.,வை சேர்ந்த சதீஷ்குமார் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.