புதுடில்லி: தாமரை நமது தேசிய மலராக இருந்தாலும், அது அரசியல் கட்சியின் சின்னமாக இருந்தாலும், அதை ஜி20 சின்னமாக பயன்படுத்தக் கூடாது என மே. வங்க முதல்வர் கூறியுள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
மாநாட்டில் நிறைவு விழாவில் மோடி கூறுகையில், ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இ ந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மே.வங்க முதல்வர் மம்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தாமரை நமது தேசிய மலராக இருந்தாலும், அது அரசியல் கட்சியின் சின்னமாக இருந்தாலும், அதை ஜி20 சின்னமாக பயன்படுத்தக் கூடாது, அவர்களுக்கு வேறு பல வழிகள் இருந்தன.

டில்லியில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு எதுவும் கிடையாது. இது ஜி-20 மாநாட்டுக்கான சந்திப்பு மட்டுமே ஆகும். ஓட்டளிக்கும் தினத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவர்களை மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா மேகலாயா சுற்றுப்பயணம்:
இதன்பின்பு, வரும் டிசம்பர் 12 முதல் 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் மேகாலயாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று மேற்கு வங்காள அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.