சென்னைவாசிகள் மத்தியில் புகழ்பெற்ற வில்லிவாக்கம் ஏரியின் இடையே 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்ணாடியால் ஆன தொங்கும் பாலம் அமைக்கப்படும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐஐடி பொறியாளர்கள் வடிவமைத்த இந்த பாலம் தற்போது எடை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது வில்லிவாக்கம் ஏரிக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் எனப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஓராண்டாக நீண்டுகொண்டிருந்த இந்த பாலம் அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அடுத்த ஆண்டு ஏப்.,-மே மாத காலத்தில் பணி நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
![]()
|
வில்லிவாக்கம் ஏரி அருகே தனியார் நிறுவனம் ஒன்று ஒரு லட்சம் சதுரடியில் கட்டடங்கள், வாட்டர் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு சாதனங்கள், பூங்கா, ரெஸ்டாரென்ட் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக வில்லிவாக்கம் ஏரிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பெறும் லாபத்தில் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய் குத்தகை தொகை கட்ட ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இந்தப் பணம் வில்லிவாக்கம் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஏரியின் அருகே ஒரு மினி நகரமே உருவாக இருப்பதால் அவ்விடம் ஓர் சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் சந்தேகமில்லை.