புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து விவாதிக்க ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா இன்று (டிச.,05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள சில தினங்களுக்கு முன் முடிவு செய்தார்.
இந்நிலையில், இவர் இன்று(டிச.,05) டில்லி வந்தடைந்தார். இதையடுத்து, டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விருந்து அளித்தார்.
ஆலோசனை:

இதையடுத்து, இருவரும் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றியும், இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி பணிகள் ஆகியவை தொடர்புடைய விரிவான விவகாரங்கள் பற்றிய ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
ஓப்பந்தம்
:
இரு அமைச்சர்களும் விரிவான இடம்பெயர்வு மற்றும் இயக்கம் கூட்டாண்மை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்களை பற்றி இருவரும் ஆலோசித்தோம். ரஷ்ய சந்தையை அணுகுவதற்கான தயாரிப்புகளின் பட்டியலை மாஸ்கோவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான ஐரோப்பிய யூனியன்கள் அடுத்த 10 நாடுகளை விட ரஷ்யாவிலிருந்து அதிக படிம எரிபொருளை இறக்குமதி செய்துள்ளன.
கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த அளவை விட 6 மடங்கு கூடுதலாக ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கும். எரிவாயு விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் முடிவில்லாத அளவுக்கு வாங்கியுள்ளது. ரஷ்ய சந்தையை அணுகுவதற்கான தயாரிப்புகளின் பட்டியலை மாஸ்கோவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.

ரஷ்யா புதைபடிவ எரிபொருள் டிராக்கர்' என்ற இணையதளம் உள்ளது, யார் உண்மையில் எதை இறக்குமதி செய்கிறார்கள் என்ற நாடு வாரியாகத் தரவை உங்களுக்கு வழங்கும், இது மிகவும் உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.