புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பா.ஜ., ஆட்சியை தக்க வைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த நவ.,12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு டிச.,1ம் தேதியும், இரண்டாம்கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு டிச.,5ம் தேதியும் (இன்று) நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், குஜராத் 2ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. 'இந்தியா டுடே' வெளியிட்ட கருத்துக்கணிப்பில்,

ஹிமாச்சல் பிரதேசம்:
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜ., 34-39 இடங்களும், காங்கிரஸ் 28-33 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி கட்சி ஒரு இடத்தையும், மற்றவை 1-4 இடங்களும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ்நவ் - இடிஜி கருத்துக்கணிப்பில் பா.ஜ., 38 இடங்களும், காங்கிரஸ் 28 இடங்களும், மற்றவை 2 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் பா.ஜ., 32-40 இடங்களும், காங்கிரஸ் 27-34 இடங்களும், மற்றவை 1-2 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜ்தக் , ஆக்சிஸ் மை இந்தியா: கருத்து கணிப்பில் பா.ஜ. 24-34, காங்கிரஸ் 30-40 , மற்றவை 4-8
![]()
|
குஜராத்:
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பா.ஜ., 117-140 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 34-51 இடங்களும், ஆம்ஆத்மி 6-13 இடங்களும், மற்றவை 1-2 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி9 குஜராத்தி கருத்துக்கணிப்பில், பா.ஜ., 125-130 இடங்களும், காங்., கூட்டணி 40-50 இடங்களும், ஆம்ஆத்மி 3-5 இடங்களும், மற்றவை 3-7 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில், பா.ஜ., 128-148 இடங்களும், காங்., கூட்டணி 30-42 இடங்களும், ஆம்ஆத்மி 2-10 இடங்களும், மற்றவை 3 இடங்கள் வரையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியை தக்க வைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.