மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க அனுமதி வேண்டி 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தல்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாலுரான்படுகை, குன்னம் ஆகிய இடங்களில் இருந்து லாரி மற்றும் டிராக்டர்களில் பொதுப்பணித்துறையினர் மூலம் மணல் எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் உள்ளவர்கள் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மணல்மேடு மாட்டுவண்டி சங்கத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தினர். மாட்டுவண்டி ஓட்டுனர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடிகண்டநல்லூர் மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் மணல் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.