பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ராஜிவ் ரஞ்சன் சிங், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, கடந்த ஆண்டு, ஜூலையில் ஆர்.சி.பி.சிங் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம், 2022ல் முடியவுள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவராக ராஜிவ் ரஞ்சன் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்சி தலைவராக இருப்பார்.