ஸ்ரீநகர்,: தேசிய மாநாட்டு கட்சித் தலைவராக பரூக் அப்துல்லா, 85, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் ஷேக் முஹமது அப்துல்லாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீநகரில் அமைந்துள்ள அவரது நினைவிடம் அருகே கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. பரூக் அப்துல்லா பெயரை முன்மொழிந்து, காஷ்மீரில் இருந்து 183 பேரும், ஜம்முவில் இருந்து 396 பேரும், லடாக்கில் இருந்து 25 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தலைவர் தேர்தலில் வேறு யாரும் போட்டியிடாததால், பரூக் அப்துல்லா மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலர் அலி முஹமது சாகர் அறிவித்தார்.
![]()
|
சமீபத்தில, கட்சி நிர்வாகிகளின் தேர்தல் முடிந்த நிலையில், 'தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப்போவதில்லை' என, பரூக் அப்துல்லா அறிவித்து இருந்த நிலையில், அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். பரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக மூன்று முறையும், ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இரண்டு முறையும், மத்திய அமைச்சராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார்.