டிசம்பர் 6, 1956
மத்திய பிரதேசம், மாவ் எனும் ஊரில், ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதிக்கு மகனாக, 1891, ஏப்ரல் 14ல் பிறந்தவர் அம்பேத்கர்.தாழ்த்தப்பட்ட குடும்பத்தில்பிறந்ததால், வாழ்நாள் முழுதும் கொடுமைகளுக்கு ஆளானார்; மெட்ரிகுலேஷன் படிப்பில் போராடி தேறினார். ஆசிரியர்களின் உதவியுடன் இளங்கலை முடித்தார்.
பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலையில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களில் முதுகலை முடித்தார். அமெரிக்காவில் படித்த முதல் இந்தியரான இவரின் ஆய்வுக் கட்டுரைகளுக்காக, 'டாக்டர்' பட்டம் பெற்றார்.
தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்; காந்தியுடன், 'பூனா ஒப்பந்தம்' செய்து, பொது ஓட்டெடுப்புடன் தனித் தொகுதிகளைப் பெற்றார். சுதந்திரத்துக்குப் பின், நாட்டின் முதல் சட்ட அமைச்சராகி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார். ஓய்வின்றி உழைத்து, நீரிழிவு நோயால், 1956ல் தன், 65வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
இந்திய அரசியலமைப்பின் தந்தை மறைந்த தினம் இன்று!