பிஹிண்ட்: மத்திய பிரதேசத்தில் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வந்த போலீஸ் அதிகாரிகள் போலீஸ் வாகனத்தில் டீசலை திருடி காசு பார்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பிஹிண்ட் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான மூன்று வாகனங்களில் டீசல் அளவு திடீர் திடீரென குறைவதாக கிடைத்த தகவலையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதி்ல், கடந்த நவம்பர் 30 ம் தேதி வரை 250 லிட்டர் டீசலை அங்கு பணிபுரியும் போலீஸ்காரர்களே திருடி விற்று காசு பார்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அளித்த புகார் தெரிவித்ததன் பேரில், டீசல் திருட்டில் ஈடுபட்ட மூன்று போலீஸ்காரர்கள், இரண்டு கான்ஸ்டபிள் என ஐந்து பே ரை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.