தி.நகர்:பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நுால்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி அளிப்பதன் துவக்க விழா, சென்னை தி.நகர் ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை நடந்தது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்திய இவ்விழாவில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.