வானகரம் வானகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, குளத்தை பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை மாநகராட்சி அருகில் வானகரம் ஊராட்சி அமைந்துள்ளது. இதில், வானகரம் மேட்டுக்குப்பம் பிரதான சாலை, கந்தமாபுரத்தில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இதன் அருகில் உள்ள குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி, முழுதும் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளன.
இதில் கொசுக்கள் முட்டையிட்டு, இனப்பெருக்கம் ஆகின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.
எனவே, இந்த குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, குளத்தை பராமரிக்க வேண்டும் என, வானகரம் ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.