கொச்சி, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், தேசியவாத காங்.,கில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருவனந்தபுரம் எம்.பி.,யாக காங்.,கைச் சேர்ந்த மூத்த தலைவர் சசி தரூர் பதவி வகித்து வருகிறார்.
![]()
|
இவர், கேரளாவில் பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதை அடுத்து, கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக, கட்சி தலைவர்கள் தரூர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தேசியவாத காங்.,கின் கேரள மாநில தலைவர் பி.சி.சாக்கோ சமீபத்தில் பேசுகையில், 'சசி தரூர் காங்.,கை விட்டு வெளியேறி தேசியவாத காங்.,கில் இணைந்தால், அவரை இருகரம் நீட்டி வரவேற்பேன்.
'அவரது அருமை காங்., கட்சியினருக்கு தெரியவில்லை. அவரை காங்., நிராகரித்தாலும், திருவனந்தபுரம் எம்.பி.,யாக சசி தரூர் தொடர்வார்' என, பேசினார்.
இது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் தேசியவாத காங்.,கில் இணையப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், சசி தரூர் நேற்று கூறியதாவது:
நான் தேசியவாத காங்.,கில் இணையப் போவதாக இருந்தால் தான், என்னை அவர்கள் வரவேற்க வேண்டும்; அப்படி எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக சாக்கோவுடன் நான் பேச்சு நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement