ஹைதராபாத்,புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், இன்று (டிச.06) விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
![]()
|
இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி கவிதாவுக்கு, சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தன் மீதான புகார் குறித்த நகலை வழங்கும் படி சி.பி.ஐ..க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு சி.பி.ஐ. தரப்பு பதில் அளிக்கவில்லை. இதனால் கவிதா ஆஜராவாரா என்பது குறித்து இன்று தெரியும்.