'புதிய கல்வி கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்'

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: ''புதிய கல்வி கொள்கை, நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.சென்னை மந்தைவெளியில் இயங்கி வரும், 'தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜூகேஷனல் சொசைட்டி'யில், பள்ளி மாணவர்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 'ராதா சுவாமி' சிறப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.இந்த மையத்தையும், ராதா
Chennai, New Education Policy, Governor Ravi, சென்னை, புதிய கல்வி கொள்கை, கவர்னர் ரவி, எஜூகேஷனல் சொசைட்டி, பன்முகத்தன்மை, பள்ளி மாணவர்கள்,  Educational Society, Diversity, School Students,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை: ''புதிய கல்வி கொள்கை, நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.

சென்னை மந்தைவெளியில் இயங்கி வரும், 'தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜூகேஷனல் சொசைட்டி'யில், பள்ளி மாணவர்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 'ராதா சுவாமி' சிறப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த மையத்தையும், ராதா சுவாமியின் உருவ படத்தையும், கவர்னர் ரவி திறந்து வைத்தார். முன்னதாக, சொசைட்டி தலைவர் ஸ்ரீனிவாசன் சுவாமி, பள்ளிகளின் சாதனைகள், திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

மொத்தம், நான்கு மாடியுடன் அமைந்துள்ள இந்த மையத்தில், மாணவர்கள் உடல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்திக் கொள்ள, பல்வேறு வசதிகள் இடம் பெற்று உள்ளன.


latest tamil news


விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

தற்போதுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தங்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் புள்ளி விபரப்படி, கல்லுாரி செல்லும் மொத்த மாணவர்களில், 70 சதவீதம் பேர் கலை பிரிவு சார்ந்த படிப்புகளில் படிக்கின்றனர்.

தமிழகத்திலும் அதிக மாணவர்கள் கலை சார்ந்த படிப்புகளையே படிக்கின்றனர்.

ஆனால், இதற்கான வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.

அனைத்து படிப்புகளும் நல்லது தான். ஆனால், உலக நாடுகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

நம் நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வளர வேண்டும். புதிய கல்வி கொள்கை, நமக்கான கல்வி கொள்கையாக, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்உருவாக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். நாட்டு பற்றை வளர்க்கவும், நமக்கான அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தி நேஷனல் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் எஜூகேஷனல்சொசைட்டி இணை செயலர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் குப்புசாமி, கவுரவ செயலர் வச்சலா நாராயணசுவாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படபலரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

raja - Cotonou,பெனின்
06-டிச-202211:27:39 IST Report Abuse
raja நாட்டின் வளர்ச்சிக்கு உதவி...அப்போதான் திருட்டு மாதேல் அரசு அதை ஆதரிக்கும்...மின்கட்டணம் எத்த சொன்னாங்க ஒன்றிய அரசின் சொல்லி... பால் கட்டணம் GST ஏத்திடாங்கன்னு சொல்லி இப்போ குடும்பம் கொள்ளை அடிக்கிரானு.....
Rate this:
Cancel
Anand - Toronto,கனடா
06-டிச-202207:40:54 IST Report Abuse
Anand மறுபடியும் ஆரம்பிச்சிட்டாருப்பா பிரசங்கத்தை
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
06-டிச-202207:13:27 IST Report Abuse
Karthikeyan K Y உயர் கல்வி அமைச்சருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும் புதிய கல்வி கொள்கையின் திட்ட வடிவம் முழுதாக தெரியுமா, எங்காவது விவாதித்திருக்கிறார்களா, லியோனி போன்றவர்களை வைத்து கொண்டு, சுபவீ போன்றவர்களை வைத்து கொண்டு கொள்கையை புரிந்து கொள்ள முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு விவாதித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து, தமிழக மாணவ, பெற்றோர் சங்கங்களுடன் விவாதித்து, அவர்களுடைய கருத்துக்களை உயிரோட்டமாக எடுத்து அதன் பின் முடிவெடுப்பது நிர்வாக பொறுப்பும், கடமையும் ஆகும். புரியாமலே மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ், லியோனி, பொன்முடி, ஜாதி தலைவர்கள், தமிழின தலைவர்கள், இதனை அரசியல் கோணத்தில் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். மாணவ சமுதாயத்திற்கு, அறிவியல் சமூகத்திற்கு, கல்வி மேம்பாட்டிற்கு அறிவு திறனுக்கு புத்தி கல்வி கொள்கையை எப்படி பயன் படும் அல்லது பாதகமா இருக்கும் என்பதை மாணவ சமுதாயமும், அறவியல் சமூகமும் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் அல்ல
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
06-டிச-202208:06:15 IST Report Abuse
Dharmavaanமாணவர்களை மூளை சலவை செய்தால்தான் ஒட்டு, பதவி , சுருட்டல், எல்லாம் முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X