பெங்களூரு-''நான் சாம்ராஜ்பேட்டின் மகன். வீட்டின் மகனை யாரும் விட்டுத்தர மாட்டார்கள்,'' என காங்., - எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
ரவுடி 'சைலன்ட்' சுனில் குமார், பெங்களூரின் சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து, காங்., எம்.எல்.ஏ., ஜமீர் அகமதுகான், நேற்று கூறியதாவது:
கடந்த 2018ல் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்தன. என்ன ஆனது? தேவகவுடாவே சவால் விடுத்தார். என்ன நடந்தது? ஜம்மு - காஷ்மீரில் இருந்து, பரூக் அப்துல்லாவை அழைத்து வந்து, களமிறக்குங்கள்.
இல்லையென்றால் குமாரசாமி, ரேவண்ணாவை களமிறக்குங்கள். நான் தோற்றால் தலையை வெட்டிக் கொள்வதாக, சவால் விடுத்திருந்தேன். இறுதியில் என்ன நடந்தது. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், நான் வெற்றி பெற்றேன்.
சாம்ராஜ்பேட் தொகுதியில், யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். வெற்றி என்னுடையதே. நான் சாம்ராஜ்பேட்டின் மகன். வீட்டை சேர்ந்த மகனை யாரும் விட்டுத்தர மாட்டார்கள். முன்பை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.