யாரின் 'சிலீப்பர் செல்' ஆர்.எஸ்.பாரதி? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
'தி.மு.க., கூட்டணியை உடைக்க முயற்சிக்கும், ஆர்.எஸ்.பாரதி யாருடைய 'சிலீப்பர் செல்' என்று தெரியவில்லை; அவர் மீது, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அக்கட்சியினர் சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.தி.மு.க., அமைப்பு செயலர் பதவிக்கு, ஆர்.எஸ்.பாரதி இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டார். அவர் துணை பொதுச்செயலர் பதவியை எதிர்பார்த்தார்; அப்பதவி
DMK Alliance, RS Bharati, Stalin, திமுக கூட்டணி, ஆர்எஸ் பாரதி, சிலீப்பர் செல், முதல்வர் ஸ்டாலின் ,  Sleeper Cell, Chief Minister Stalin,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


'தி.மு.க., கூட்டணியை உடைக்க முயற்சிக்கும், ஆர்.எஸ்.பாரதி யாருடைய 'சிலீப்பர் செல்' என்று தெரியவில்லை; அவர் மீது, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அக்கட்சியினர் சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.

தி.மு.க., அமைப்பு செயலர் பதவிக்கு, ஆர்.எஸ்.பாரதி இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டார். அவர் துணை பொதுச்செயலர் பதவியை எதிர்பார்த்தார்; அப்பதவி அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம், எம்.பி., - எம்.எல்.ஏ.,வாகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், எளிதாக பதவி கிடைக்காது' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.


latest tamil news

இந்நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், மாமல்லபுரத்தில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேச்சு அமைந்தது.

'உழைப்பவர்களுக்கு, அதற்குரிய வாய்ப்பு உண்டு. பதவி வரும்; போகும். கட்சியே உயிர் மூச்சு என உழைத்ததால், 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி அமைத்துள்ளோம்' என்று, முதல்வர் ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதியை வைத்துக் கொண்டே பேசினார்.

கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் தரும் புகார்களை விசாரிக்கிற பொறுப்பு, அமைப்பு செயலருக்கு உண்டு. ஆனால், அமைப்பு செயலரே, கட்சி மேலிடம் மீது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் பேசியது, தி.மு.க.,வினர் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே, ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், முன்னாள் முதல்வர் காமராஜர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ போன்றவர்களை ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்; பின் வருத்தமும் தெரிவித்தார்.

எனவே, அவர் மீது கட்சி ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சமூகவலைதளங்களில் ஆர்.எஸ்.பாரதி மீது, உடன் பிறப்புகள் விமர்சித்துள்ள பதிவுகள்:

தனக்கு பதவி தரவில்லை என்பதற்காக, தி.மு.க., தலைமையிலான வலிமையான கூட்டணியை உடைக்க திட்டமிடுகிறார்

தன்னால் தான் தி.மு.க.,வுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது என, உரிமை கோருகிறார். தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகளும், ஆர்.எஸ்.பாரதியின் தொடர் உளறலை எப்படி சகித்து கொண்டு இருக்கிறது

தி.மு.க., கூட்டணியை உடைக்க யாருடைய 'சிலீப்பர் செல்'லாக ஆர்.எஸ்.பாரதி செயல்படுகிறார். இவரை கண்காணிப்பு வளையத்தில் வைத்து, கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான கருத்துகள் பதிவாகி உள்ளன.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (27)

06-டிச-202221:49:55 IST Report Abuse
தேவதாஸ் புனே அந்தோ...... பரிதாபம்.....
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
06-டிச-202212:50:52 IST Report Abuse
Barakat Ali இறுதிநாள் அறிகுறிகள் பல .... அதில் ஒன்றுதான் இது :
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202212:08:14 IST Report Abuse
duruvasar கூட்டணி கட்சிக்கள் தட்டினால் உடையும் நிலையில்தான் இருக்கிறது என்று உடன்பிறப்புகளுக்கு தெரிந்திருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X