''குணா இப்படி வாரும்...'' என, நண்பரை அழைத்து, டீ வாங்கிக் கொடுத்து, அவரை அனுப்பி வைத்த குப்பண்ணா, ''ஜூனியர் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு குடுத்திருக்கா ஓய்...'' என்றார்.
''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாநகராட்சியில, ஒரு வருஷத்துக்கும் மேலா, 'சிட்டி இன்ஜினியர் போஸ்டிங்' காலியாவே இருந்துது... பொதுவா, இந்த மாதிரி இடங்கள்ல, நிர்வாக பொறியாளரா இருக்கறவாளை, கூடுதல் பொறுப்புல போடுவா ஓய்...
![]()
|
''ஆனா, இப்ப பேரூராட்சிகள்ல உதவி நிர்வாக பொறியாளரா இருந்த ஒருத்தருக்கு, கோவை மாநகராட்சி நிர்வாக பொறியாளரா பதவி உயர்வு வழங்கி, கூடுதலா சிட்டி இன்ஜினியர் போஸ்டிங்கையும் குடுத்திருக்கா...
''சீனியர்கள் பலர் பதவி உயர்வுக்கு காத்துண்டு இருக்கறச்சே, ஜூனியர் அதிகாரி, அதுவும் பேரூராட்சியில வேலை பார்த்தவருக்கு, கூடுதல் பொறுப்பு குடுத்தது, புகைச்சலை ஏற்படுத்திடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement