கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி: சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிஉள்ளது.உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலும், பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவில், பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.இதன்படி, கடல் அலையின் வீச்சில், 'டர்பைன்' என்ற சுழலியை சுழற்றி, மின்சாரம்
கடல் அலை, மின்சாரம், தொழில்நுட்ப கருவி, சென்னை ஐஐடி, எரிசக்தி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிஉள்ளது.

உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலும், பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவில், பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இதன்படி, கடல் அலையின் வீச்சில், 'டர்பைன்' என்ற சுழலியை சுழற்றி, மின்சாரம் தயாரிக்கும் முறையும் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த முறையில், பல்வேறு தனியார் நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்து வரும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யும் புதிய கருவியை உருவாக்கி உள்ளது.


latest tamil news


தமிழகத்தில், துாத்துக்குடி கடற்கரையில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் கடற்பகுதிக்குள், 20 மீட்டர் ஆழத்தில் இந்த கருவி நிறுவப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கருவி, வேகமான கடல் அலையை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த கருவியின் வழியே அடுத்த மூன்று ஆண்டுகளில், 1 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என, ஐ.ஐ.டி., முயற்சி மேற்கொண்டு உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., யின் கடலியல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அப்துல் சமது தலைமையிலான அணியினர், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு, இந்த கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.

பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (7)

Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
06-டிச-202213:48:57 IST Report Abuse
Kalyan Singapore என் நம் நாட்டில் அதிகமாக கிடைக்கும் தோரியம் என்கிற தாதுவை வைத்து அணு உலைகள் தயாரித்தோமேயானால் பாதுகாப்பான அணு உலைகளை நாடு முழுதும் நிறுவலாம் . ஆரம்ப முதலீடு சற்று அதிகம். அது பாதுகாப்பை கருதும் பொது நியாயமாகவே இருக்கும் .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202211:55:36 IST Report Abuse
duruvasar அருமையான முயற்சி . வாழ்த்துக்கள் . இப்படி உயிரெழுத்துகள் வரிசையில் அடுக்கிக்கொண்டு போக வாய்ப்புக்கள் அதிகம் .
Rate this:
Cancel
06-டிச-202211:28:37 IST Report Abuse
சிந்தனை அருமை. வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X