பயங்கரவாதிகளின் 'ஹிட் லிஸ்ட்': அச்சத்தில் காஷ்மீரி பண்டிட்கள்

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ஜம்மு: பயங்கரவாதிகள் புதிதாக 'ஹிட் லிஸ்ட்' வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சத்தில் உள்ளனர்.பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், காஷ்மீரி பண்டிட்கள், ஜம்மு - காஷ்மீரில் பல இடங்களில் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு, பயங்கரவாதி, காஷ்மீர், பண்டிட்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: பயங்கரவாதிகள் புதிதாக 'ஹிட் லிஸ்ட்' வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சத்தில் உள்ளனர்.


பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், காஷ்மீரி பண்டிட்கள், ஜம்மு - காஷ்மீரில் பல இடங்களில் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சமடைந்தனர். தங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும்படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.



latest tamil news

இதை வலியுறுத்தி, ஜம்முவில் உள்ள மறுவாழ்வு கமிஷனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டம், 200 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு ஒன்று சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டது. இதில், காஷ்மீரில் பணியாற்றும் அரசு ஊழியர்களான, 56 காஷ்மீரி பண்டிட்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இவர்களை கொல்லப் போவதாக அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.இதையடுத்து, காஷ்மீரி பண்டிட்களின் அச்சம் அதிகரித்துள்ளது. உடனடியாக தங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி போராட்டத்தை தீவிரப்படுத்திஉள்ளனர். அரசுப் பணியில் உள்ள காஷ்மீரி பண்டிட்கள் குறித்த பட்டியல் பயங்கரவாதிகளுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (14)

Kumar - Madurai,இந்தியா
06-டிச-202213:13:48 IST Report Abuse
Kumar அவ்வளவுதான் எல்லா போராளிகளும் படை எடுத்து வந்து கதற ஆரம்பித்து விடுவார்கள்.கூடிய விரைவில் தமிழ்நாட்டிலேயும் இந்த நிலைதான்.முக்கியமாக இந்த‌ போராளிகளுக்கும் இந்த நிலைதான்.
Rate this:
Cancel
MPRMTNJ - CHENNAI,இந்தியா
06-டிச-202212:46:08 IST Report Abuse
MPRMTNJ நாரதர் வேலையை நன்றாக செய்கிறது..... ஒரு அற்ப சந்தோஷம். வேறென்ன?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-டிச-202211:57:26 IST Report Abuse
Rafi முந்தைய ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தவர்கள், முழுக்க முழுக்க பிஜேபி ஆட்சி செய்யும் பகுதி அது, இப்போதுதான் பண்டிட்டுகளுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்றால் இவர்களே திட்டமிட்டு பிரச்சனையை உற்பத்தி செய்கின்றார்கள் என்பது புலனாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X