மீனாட்சி அம்மன் கோயிலில் 15 ஆண்டு உண்டியல் வருவாய் ரூ.100 கோடி

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 15 ஆண்டுகளில் உண்டியல்கள் மூலம் ரூ.100.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட சமயத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உண்டியல் வருவாயும் சீராக இருந்துள்ளது.இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். காணிக்கையாக ரொக்கம், தங்கம், வெள்ளி, வெளிநாடு கரன்சிகளை செலுத்துகின்றனர்.
Meenakshi Amman Temple, Madurai, temple, hindu, மதுரை, மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 15 ஆண்டுகளில் உண்டியல்கள் மூலம் ரூ.100.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட சமயத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உண்டியல் வருவாயும் சீராக இருந்துள்ளது.

இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். காணிக்கையாக ரொக்கம், தங்கம், வெள்ளி, வெளிநாடு கரன்சிகளை செலுத்துகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்பட்டு வருகிறது. கடந்த 2008 முதல் 2022 நவ., வரை உண்டியல் வருவாயாக 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913 கிடைத்துள்ளது.


கொரோனா ஊரடங்கு 2020 மார்ச் 22ல் துவங்கியது. அடுத்தடுத்து பகுதி நேரம், இரவு நேரம் என ஆரம்பித்து முழு நேரமாக ஊரடங்கு அமலானது. கொரோனா பரவல் குறைவை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அந்த கால கட்டத்தில் (2020-21) ரூ.3 கோடியே 86 லட்சத்து 10 ஆயிரத்து 882 உண்டியல் வருவாயாக கிடைத்தது.


latest tamil news


எவ்வளவு வருவாய்


ஆண்டுதோறும் கோயிலுக்கு கிடைத்த உண்டியல் வருவாய்: 2008-09ம் ஆண்டு ரூ.3.44 கோடி, 2009-10 ரூ.4.22 கோடி, 2010-11 ரூ.4.97 கோடி, 2011-12 ரூ.5.86 கோடி, 2012-13 ரூ.6.32 கோடி, 2013-14 ரூ. 6.84 கோடி, 2014-15 ரூ.7.35 கோடி, 2015-16 ரூ.7.93 கோடி, 2016-17 ரூ. 8.78 கோடி, 2017-18 ரூ. 9.39 கோடி, 2018-19 ரூ.9.82 கோடி, 2019-20 ரூ.7.24 கோடி, 2020-21 ரூ.3.86 கோடி, 2021-22 ரூ.8.95 கோடி, 2022(அக்., வரை) ரூ.4.12 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (10)

duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202214:20:51 IST Report Abuse
duruvasar இதையெல்லாம் அறிந்துதான்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-டிச-202210:26:35 IST Report Abuse
sankaseshan Aramillaatha thurayin nirvaakathil Selavu varuvaikku Mel thaan irukkum Thaniyaar vasam irunthaal katavulitam bayam Irukkum , naathika vitiyal aatchiyil ithai ethir paarkka mutiyaathu
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
06-டிச-202210:24:15 IST Report Abuse
Narayanan சேகர்பாபு மதுரைக்கு போய்விட்டாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X