வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் ம.தி.மு.க., தலைமை கழக செயலாளர் துரை கூறியதாவது: ஜனநாயக நாட்டில் எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது என்பது வைகோவின் கருத்து. சில மதவாத சக்திகள் அவர் கோயிலுக்கு சென்றதை தவறாக சித்தரிக்கின்றனர். அவர் பகுத்தறிவாளர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் கிடையாது. இயக்கத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் நிர்பந்தித்தால் அதை ஏற்கும் நிலையில் உள்ளேன். மதவாத சக்திகளுக்கு எதிராக கூட்டணியில் பா.ம.க., மட்டுமல்ல, மதசார்பற்ற எந்த இயக்கமாக இருந்தாலும் இணைந்தால் மகிழ்ச்சிதான், என்றார். மாவட்ட செயலாளர் மார்நாடு, எம்.எல்.ஏ., பூமிநாதன் உடனிருந்தனர்.