வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில் கோகிலவாணி, 21, என்ற மாணவி, மூன்றாமாண்டு பி.ஏ., சுற்றுலாவியல் படித்து வருகிறார்.
கடந்த நவ., 1 முதல், 25ம் தேதி வரை டில்லியில் என்.சி.சி., மாணவியர் பிரிவினர் பங்கேற்ற 'பாரா கேம்ப்' நடந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து இரு மாணவர்கள், ஒரு மாணவி பங்கேற்றனர்.
அதில், மாணவி கோகிலவாணி போர் விமானத்தில் பயணித்து, 2 கி.மீ., உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாகச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு, 31வது என்.சி.சி., தனி அணி கமாண்டர் கர்னல் சீனிவாஸ், உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.