'பாதுகாப்புக்காக, தேசியக் கட்சியில இணையப் போறாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பக்கத்துல இருக்கிற கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை தான் சொல்லுதேன்... கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடின்னு, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மேல இருக்கு வே...
''அ.தி.மு.க., ஆட்சியில, மாவட்டத்தின் பல தொழிற்சாலைகள்ல, 'ஸ்கிராப்' எடுக்கிறது, ரியல் எஸ்டேட் தொழில்னு வளம் கொழிச்சாரு... தி.மு.க., ஆட்சி வந்ததும், ரவுடிக்கு வருவாய் கிடைச்ச வழிகளை ஆளுங்கட்சியினர் அபகரிச்சுட்டாவ வே...
![]()
|
''இப்ப பாதுகாப்பு தேடி, பா.ஜ.,வுல இணைய முடிவு பண்ணிட்டாரு... முதல் கட்டமா, அவரது மனைவி பா.ஜ.,வுல சேர்ந்துட்டாங்க வே... சமீபத்துல, ஸ்ரீபெரும்புதுார்ல நடந்த, பா.ஜ., நிகழ்ச்சிக்கு வந்திருந்த, மாநிலச் செயலர் வினோஜ் செல்வத்தை மேடைக்கு பின்னாடி பார்த்து, ரகசியமா பேசி இருக்காரு... சீக்கிரமே, தாமரை கட்சியில சங்கமிச்சிடுவார்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.