கோவையில் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு: பா.ஜ., இப்ராஹிம் எச்சரிக்கை

Added : டிச 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை : ''கோவையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பா.ஜ., விளங்குகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை
Coimbatore, BJP, Vellore Ibrahim, கோவை, பாஜ, வேலுார் இப்ராஹிம், ஆர்எஸ்எஸ், RSS,



கோவை : ''கோவையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பா.ஜ., விளங்குகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை வி.சி., கட்சியினர் உட்பட பல கட்சியினர் முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர்.

பா.ஜ., சிறுபான்மை பிரிவின் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், ஹிந்துக்களோடு இணைந்து ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுப்போம்.

மக்களின் உரிமைகளுக்காக போராடினால் தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கின்றனர். ஊழல்வாதிகள் தான் தற்போது தி.மு.க., அமைச்சரவையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

கோவையில் சில இடங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன; அவற்றை நாங்கள் மாற்றுவோம். கோவையில் அடுத்த ஆறு மாதத்துக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

அதற்காக இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றனர். கோவை உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவை போலீசார் மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

sankar - சென்னை,இந்தியா
07-டிச-202210:24:57 IST Report Abuse
sankar சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மாதிரி பா.ஜ .இப்ராஹிம் என்ற அடைமொழி சூப்பருங்க, சரி, இந்த ஆளை தினமலர் தவிர எத்தனை பேருக்கு தெரியும்.
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
07-டிச-202212:27:37 IST Report Abuse
Muralidharan raghavanஅது முக்கியம் அல்ல. அவர் கூறும் விஷயம்தான் முக்கியம். அதனை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்...
Rate this:
Cancel
Sami - Tirupur,இந்தியா
07-டிச-202209:17:18 IST Report Abuse
Sami வெறும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெறும் வெட்டி பேச்சு ...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202205:13:00 IST Report Abuse
J.V. Iyer விடியாமூஞ்சி ஆட்சியில் தேசவிரோத சக்திகளுக்கு பாதுகாப்பு அளித்தால் இது சாத்தியமே. இன்னும் ஒரு குண்டுவெடிப்பு, விடியாமூஞ்சி ஆட்சி கலைப்பு.
Rate this:
beindian - doha,கத்தார்
07-டிச-202210:15:23 IST Report Abuse
beindianஉளவுத்துறைக்கே தெரியாத விசயம் வேலூருக்கு தெரிந்திருக்கிறது அப்படியென்றால் ....... நீங்கதானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X