புதுச்சேரி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க.,சார்பில் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராசன், நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, திருநாவுக்கரசு, ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வையாபுரிமணிகண்டன்:முத்தியால்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர்பிரமுகர்கள் ஊர்வலமாக காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டுக்கு வந்தனர்.
அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு வையாபுரி மணிகண்டன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழைகளுக்கு வையாபுரி மணிகண்டன் அன்னதானம் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வரின் நினைவு தினத்தையொட்டி தேங்காய் திட்டு காக்காயந்தோப்பு,வீராம்பட்டினம் பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிகளில் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க.,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஓம்சக்தி சேகர்:இதேபோல, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் ஜெயலலிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 100 அடி சாலையில் உள்ள ஜெ., சிலைக்கு ஓம்சக்திசேகர் மாலை அணிவித்து உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து லெனின் வீதியில் உள்ள தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சதாசிவம், கணேசன், கோவிந்தம்மாள், சங்கர் உடையார், மாசிலா குப்புசாமி, மலை செல்வராஜ், முருகதாஸ், லட்சுமணன், வெரோனிகா, புகழ் பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.