வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ., வலுவாக உள்ள மாநிலத்தில் புதிய கட்சிக்கு 15 முதல் 20 சதவீத வாக்கு சதவீதம் கிடைப்பது பெரிய விஷயம் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் முடிந்த நிலையில், வெற்றி யார் வசம் என்பது குறித்து பல்வேறு டிவி சேனல்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில், குஜராத்தில் அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரசும், பிறகு ஆம் ஆத்மியும் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், இந்த முடிவுகள் நேர்மறையாக உள்ளது. புதிய கட்சிக்கு, அதுவும் பா.ஜ., மிகவும் வலுவாக உள்ள மாநிலத்தில் 15 முதல் 20 சதவீத ஓட்டுகள் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.