உத்தமபாளையம: தேசிய சிலம்ப போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர்கள் பல பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை செய்தனர்.
கன்னியாகுமரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கெளசிக் ராஜ் ஒற்றைக் கம்பு,| இரட்டை கம்பு மற்றும் ஆயுதப் பிரிவு ஆகிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அதேபோல் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தெய்வேந்திரன் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு மற்றும் ஆயுத பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் முதல் இடம் பெற்றார். சாதனை மாணவர்களை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் எம்.தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் செந்தால் மீரான், முதல்வர் முகமது மீரான் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.