டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களில் தீவிரமாக முதலீடு செய்து வரும் டைகர் குளோபல் என்ற அமெரிக்க நிறுவனம், நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப்களில் சீரிஸ் ஏ ரவுண்டில் சுமார் ரூ.3,700 கோடி முதலீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 80% கூடுதல் தொகை ஆகும்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வளர்ச்சி கண்டு வருகின்றன. மிகப்பெரிய சந்தை வளர்ச்சி வாய்ப்பை கொண்டுள்ள இந்தியா முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஒரு இடமாக தற்போது உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கோவிட் தாக்கத்தால் உலகம் பெரும் பொருளாதாரங்கள் சிக்கல்களைச் சந்திக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் முதலீடுகளை குறைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் டைகர் குளோபல் நிறுவனம் இந்தாண்டு தனது முதலீட்டினை இந்திய ஸ்டார்ட்அப்களில் அதிகரித்துள்ளது. 2022ன் முதல் 11 மாதங்களில் சுமார் ரூ.3,600 கோடி சீரிஸ் ஏ ரவுண்டில் முதலீடு செய்துள்ளது. 2021ல் இந்த தொகை சுமார் ரூ.2,000 கோடி மட்டுமே. நியூயார்க்கை சேர்ந்த டைகர் குளோபர் நிறுவனம் உலகளவில் இந்தாண்டு சீரிஸ் ஏ ரவுண்டில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.24,000 ஆகும். இது கடந்த ஆண்டை விட 11% குறைவு. கடந்த 2021ல் முதல் 11 மாதங்களில் ரூ.26,600 கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தது.
இந்தியாவில் ஸ்டார்ட்அப்களுக்கான ஆரம்ப கட்ட முதலீடுகளின் வேகம் இந்த ஆண்டு அதிகரித்தாலும், சீரிஸ் ஏ முதலீடுகள் பின்தங்கியுள்ளன. ஆரம்ப கட்ட முதலீடுகள் 2021 உடன் ஒப்பிடும்போது 2022 இன் முதல் 11 மாதங்களில் 30 சதவீதம் அதிகரித்தது, அதே சமயம் சீரிஸ் ஏ சுற்று சுமார் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.
இந்திய ஸ்டார்ட்அப் சூழல்.
துணிகர முதலீடுகளுக்கான ஆலோசகரான விக்ரம் குப்தா இந்திய ஸ்டார்ட்அப் சூழல் குறித்து கூறியதாவது: இந்தியாவில் 60,000 ஸ்டார்ட்அப்கள் பதிவு செய்துள்ளன. அதில் சுமார் 25,000 நிறுவனங்கள் ஏஞ்சல், சீட் மற்றும் சீரிஸ் ஏ ஆகிய வகை முதலீடுகளை பெற்றுள்ளன. அவற்றில் 100+ நிறுவனங்கள் யுனிகார்ன் என்றழைக்கப்படும் 100 கோடி டாலர் மதிப்புக் கொண்ட நிறுவனங்களாக மாறியுள்ளன. இன்னும் பல யூனிகார்ன்களை உருவாக்குவதற்கான மிகப்பெரிய சாத்தியம் உள்ளது. ஆனால் சீரிஸ் ஏ ரவுண்டில் சவால்கள் உள்ளன. இவ்வாறு கூறினார்.
டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களில் தீவிரமாக முதலீடு செய்து வரும் டைகர் குளோபல் என்ற அமெரிக்க நிறுவனம், நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப்களில் சீரிஸ் ஏ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது