வடபழநி ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | |
Advertisement
சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இந்த வருடம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.திருவிழாவிற்காக கோயிலின் மூலவர் சன்னதியைச் சுற்றியுள்ள மூன்று பக்க சுவர்களில் 8001 அகல் மின் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளது. இது போக கோவிலின் ராஜகோபுரம் உள்புற துாண்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகமே தீப ஒளியால் ஜொலி



latest tamil news

சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இந்த வருடம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


திருவிழாவிற்காக கோயிலின் மூலவர் சன்னதியைச் சுற்றியுள்ள மூன்று பக்க சுவர்களில் 8001 அகல் மின் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளது. இது போக கோவிலின் ராஜகோபுரம் உள்புற துாண்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகமே தீப ஒளியால் ஜொலி ஜொலிக்கிறது.


latest tamil news

பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 108 எண்ணெய் குத்து விளக்குகளில் தீபம் ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது இதில் கோயிலுக்கு வந்த பக்தர்களைக் கொண்டே தீபம் ஏற்றச் செய்தனர்.


தீபத்திருவிழாவினை முன்னிட்பு கோயிலின் உள்பிராகரத்தில் உள்ள மீனாட்சி அம்மன்,அங்காரகன்,சண்முகர் சன்னதிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பார்க்க பரவசத்தை தரும் வகையில் உள்ளது.


latest tamil news

வடபழநி ஆண்டவர் வீற்றிருக்கும் மூலவர் சன்னதியிலும் பெரிய எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.


இன்று பெரிய கார்த்திகை என்பதால் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் பல இடங்களில் எண்ணெயால் எரியும் அகல் விளக்குகள் ஏற்றப்பட இருக்கிறது.


-எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X