பங்குச்சந்தை ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான எடல்வைஸ், வரும் 2024 மற்றும் 2025 நிதியாண்டுகளிலும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து அதிகபட்ச டிவிடெண்ட் தொகையை வழங்கும் என தெரிவித்துள்ளது. இதனால் வேதாந்தா பங்கின் டார்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
கோடீஸ்வரர் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனம் சுரங்கம் மற்றும் உலோகத் தொழிலில் உள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் ஜிங்க், வெள்ளி, இரும்புத் தாது, எஃகு, தாமிரம், அலுமினியம், எண்னெய் மற்றும் எரிவாயு தொழில்களை நடத்தி வருகிறது. 2024 நிதியாண்டில் ஜிங்க், அலுமினியம், அலுமினா, நிலக்கரி ஆகியத் தொழில்களை விரிவாக்க உள்ளது. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த உள்ளனர்.
![]()
|
வேதாந்தா நிறுவனம் பற்றி எடல்வைஸ் தனது ஆய்வுக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிவிடென்ட் தொகை மூலம் வேதாந்தா ரிசோர்சஸ் லெவலில் பெரும்பாலான கடன்களை குறைத்துள்ளதாக நம்புகிறோம். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக நிறுவனம் தொடர்ந்து அதிக டிவிடென்ட் வழங்கி வருவதால், சிறியளவிலான பங்குதாரர்களுக்கும் அது பயனளிக்கிறது. சமீபத்தில் மூலதன ஒதுக்கீடு கொள்கையை வகுத்தது. அதில் பெறப்பட்ட முழு டிவிடெண்ட்டையும் கடனை அடைக்க செலுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் லாபத்தில் குறைந்தபட்சம் 30% டிவிடென்ட் வழங்கும்.
![]()
|
அதன்படி, அடுத்த நிதியாண்டில் வேதாந்தா பங்கு ஒன்றிற்கு ரூ.48 அல்லது ரூ.45 டிவிடெண்ட் செலுத்தும். இது வேதாந்தா பங்கின் தற்போதைய விலையில் பார்த்தால் 15% ஆகும். இதன் காரணமா வேதாந்தா நிறுவனத்திற்கு ரூ.374 (தற்போதைய விலை ரூ.314) என்ற டார்கெட் விலையை நிர்ணயித்துள்ளோம். மூலப்பொருட்கள் விலையும் ஏற்றம் காண வாய்ப்பில்லை. ஜிங், சில்வர், ஈயம் போன்ற பணம் கொழிக்கும் தொழில்களால் நிறுவனம் பயனடையும். இவ்வாறு கூறியுள்ளது.