திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே புத்தகம் காணாமல் போனது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில், இன்று ஒருவர் இன்னொருவரை பள்ளியில் வைத்து கத்தியால் முதுகில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.
இது சம்பந்தமாக கிடைத்த தகவலின் படி, சம்பவயிடம் சென்ற போலீசார் கத்தியால் தாக்கிய மாணவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.